/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜி.ஹெச்., கழிவறையில் நோயாளி விபரீத முடிவு
/
ஜி.ஹெச்., கழிவறையில் நோயாளி விபரீத முடிவு
ADDED : செப் 29, 2025 07:21 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த, 50 வயது மதிக்கதக்க நபர், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், இரு தினங்களுக்கு முன் சேர்க்கப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென காணவில்லை. ஒரு கழிவறை கதவு நீண்ட நேரமாக சாத்தப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பிற நோயாளிகளின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சென்று பார்த்த போது கழிவறை ஜன்னலில் லுங்கியால் துாக்கிட்ட நிலையில் இருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்ததை உறுதி செய்தனர். சிகிச்சையில் சேர்ந்த அவரது பெயர், ஊர் குறித்த விபரங்களை, மருத்துவமனை ஊழியர்களிடமும் அவர் தெரிவித்திருக்கவில்லை. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.