/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த மக்கள் தாசில்தார் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை

ADDED : மார் 31, 2024 04:25 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, சாலை வசதி இல்லாததால், தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவித்த நிலையில், தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் பஞ்., உட்பட்ட தொளுவபெட்டா, டி.பழையூர், கல்பண்டையூர், குல்லட்டி, கவுனுார், தொட்டதேவனஹள்ளி ஆகிய கிராமங்களில், 400 ஆண்டுக்கும் மேலாக மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களுக்கு மேலுார் கிராமத்தில் இருந்து சாலை வசதி இல்லை. கடந்த, 3 முறை சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர். ஆனால் அதிகாரிகள் சமாதானம் பேசி, சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து ஓட்டளிக்க செய்தனர். ஆனால், வாக்குறுதி படி, சாலை அமைக்காததால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் தினமும் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, 6 கிராம மக்களுக்கும் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
இதையறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர், கெலமங்கலம் பி.டி.ஓ., சீனிவாசமூர்த்தி ஆகியோர், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்து நேற்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலை அமைக்க ஆர்டர் வந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் சாலை அமைக்கப்படும் என்றனர். ஒவ்வொரு முறையும், இதைத்தான் கூறி வருகிறீர்கள். அதனால், சாலை அமைக்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என, மக்கள் கூறி விட்டு, அங்கிருந்து சென்றனர்.