/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாநகராட்சியில் குட்டிகளுடன் திரியும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி
/
ஈரோடு மாநகராட்சியில் குட்டிகளுடன் திரியும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி
ஈரோடு மாநகராட்சியில் குட்டிகளுடன் திரியும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி
ஈரோடு மாநகராட்சியில் குட்டிகளுடன் திரியும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி
ADDED : மே 27, 2025 01:53 AM
ஈரோடு ;ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வருவதாக கூறும் நிலையில், குட்டிகளுடன் நாய் உலா வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண் டும். இரவில் மட்டுமின்றி பகலிலும் கூட வெளியே செல்ல முடியாத அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது. மாநகராட்சியும் தனியார் அமைப்புடன் இணைந்து, தெரு நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வருகிறது. ஆனாலும், எண்ணிக்கை குறைந்ததாக தெரிவில்லை.
தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாக மாநகராட்சி ஒருபுறம் தெரிவித்து வரும் நிலையில் தெரு நாய்கள் ஆங்காங்கே குட்டிபோட்டு குடும்பமாக சாலைகளில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதி, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், இந்த காட்சியை காண முடிகிறது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: தெரு நாய்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் குடும்ப கட்டுப்பாடு செய்ததாக கூறினாலும், குட்டிகளுடன் நாய்கள் சுற்றித்திரிவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இனியேனும், தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.