ADDED : டிச 07, 2024 07:17 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட கங்காபுரத்தில் இருந்து கொங்கம்பாளையம் செல்லும் வகையில், 3 கி.மீ., தூரத்-துக்கு சாலை உள்ளது. கொங்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள்
இருக்கின்-றன.
இதனால், கங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள், கொங்கம்பாளையத்துக்கு இச்சாலை
வழி-யாக தான் செல்ல வேண்டும். அப்பகுதி கிராம மக்களுக்கு முக்-கிய வழித்தடமாக உள்ளது. இச்சாலை குண்டும்
குழியுமாக இருப்பதால், புதிய சாலை அமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து வார்டு
கவுன்சிலர் கவு-சல்யா பலமுறை மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தார். ஆனால், நிதி பற்றாக்குறையை காரணம்
காட்டி, சாலை சீரமைக்-கப்படவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரண-மாக, குண்டும் குழியுமான சாலையில்
மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இரு சக்கரவாகனத்தில் கூட செல்ல முடியாத அளவுக்கு
அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்-ளனர்.