/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சதுர்த்தி பூஜை பொருள் வாங்க குவிந்த மக்கள் ஈரோட்டில் களை கட்டிய வர்த்தகம்
/
சதுர்த்தி பூஜை பொருள் வாங்க குவிந்த மக்கள் ஈரோட்டில் களை கட்டிய வர்த்தகம்
சதுர்த்தி பூஜை பொருள் வாங்க குவிந்த மக்கள் ஈரோட்டில் களை கட்டிய வர்த்தகம்
சதுர்த்தி பூஜை பொருள் வாங்க குவிந்த மக்கள் ஈரோட்டில் களை கட்டிய வர்த்தகம்
ADDED : ஆக 27, 2025 01:13 AM
ஈரோடு, விநாயகர் சதுர்த்தி இன்று இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு தேவைப்படும் விநாயகர் சிலை, குடைகள், எருக்கம்பூ மாலை, அருகம்புல், மாவிலை, வாழை கன்று உள்ளிட்டவற்றின் விற்பனை, ஈரோட்டில் எம்.எஸ்.சாலையில் நேற்று அமோகமாக நடந்தது. இதற்காக காலை முதலே மக்கள் வந்தாலும், மாலை, 5:00 மணிக்கு மேல் எண்ணிக்கை அதிகரித்து விற்பனை களை கட்டியது. விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
பஸ் ஸ்டாண்டை ஒட்டிய சாலையில் பூக்கடைகள் ஏராளமாக உள்ளன. மதியம் முதல் பூமாலை, உதிரி பூக்களை வாங்க குவித்த மக்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் காய்கறி மார்க்கெட்டில் பழங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். சிம்லா ஆப்பிள் கிலோ, 130 ரூபாய், சாத்துக்குடி, 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது தவிர பூவன், நேந்திரன், பச்சை நாடன், செவ்வாழை உள்ளிட்ட பழங்கள் விற்பனை செய்யப்பட்டது.
அரசு விடுமுறை தினம் என்பதால் சதுர்த்தியை கொண்டாட பலரும் ஊருக்கு கிளம்பினர். மேலும் மக்கள் அதிகளவில் மாநகருக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றதால், பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது. ஈரோடு மாநகர வீதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் திரண்டதால் கூட்டம் இயல்பை விட கூடுதலாக இருந்தது. வர்த்தகமும் சிறப்பாக அமைந்தது.