/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கம்பத்தில் 'லாந்தர்' ஏற்றி பு.புளியம்பட்டியில் மக்கள் அதிரடி
/
மின் கம்பத்தில் 'லாந்தர்' ஏற்றி பு.புளியம்பட்டியில் மக்கள் அதிரடி
மின் கம்பத்தில் 'லாந்தர்' ஏற்றி பு.புளியம்பட்டியில் மக்கள் அதிரடி
மின் கம்பத்தில் 'லாந்தர்' ஏற்றி பு.புளியம்பட்டியில் மக்கள் அதிரடி
ADDED : டிச 03, 2024 01:49 AM
மின் கம்பத்தில் 'லாந்தர்' ஏற்றி
பு.புளியம்பட்டியில் மக்கள் அதிரடி
புன்செய் புளியம்பட்டி, டிச. 2-
புன்செய்புளியம்பட்டி நகராட்சி பகுதியில், மின் கம்பம் இருந்தும் தெரு விளக்குகள் பொருத்தப்படாததால் இரவில் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக நகராட்சி, 13வது வார்டு தோட்டசாலை மற்றும் திருமால் நகர் பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட வீடு மற்றும் தோட்டங்களில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சாலையில், 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. ஆனால், ஒரு கம்பத்தில் கூட விளக்கு இல்லை. இதனால் இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். வயல் பகுதியையொட்டி வீடுகள் உள்ளதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டன. தெருவிளக்குகள் அமைத்து தர கோரி பலமுறை நகராட்சியில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று மாலை மின் கம்பத்தில் லாந்தர் விளக்கு ஏற்றி, அப்பகுதி மக்கள் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 'தெரு விளக்குகள் அமைத்து தரக்கோரி, பலமுறை புகார் கொடுத்தும் நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். நகராட்சி மேற்பார்வையாளர்கள் என்ன தான் செய்கின்றனர்?' என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.