/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதி
/
குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதி
ADDED : மே 20, 2024 01:53 AM
ஈரோடு: ஈரோட்டில் இருந்து வாசவி கல்லுாரி வழியாக பவானிக்கு, பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. பவானியில் இருந்து பெருந்துறை செல்லும் அரசு பஸ்சும், இவ்வழியாக தான் செல்ல வேண்டும். கல்லுாரி அருகேயுள்ள சாலை குண்டும் குழியுமான காட்சி அளிக்கிறது. குறிப்பாக, சாலையில் ராட்சத பள்ளம் காணப்படுவதால், போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
போக்குவரத்து நிறைந்த சாலையாக இருப்பதால், ஒரு வாகனத்தின் பின்னால் மற்றொரு வாகனம் செல்லும் போது, வாகன ஓட்டிகள் பள்ளத்தின் அருகே செல்லும் போது திடீரென பிரேக் போடுவதால், பின்னால் வரும் வாகனம் முன்னால் செல்லும் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தால் தடுமாறி விழும் சூழல் உள்ளது. மேலும், போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், புதிய தார்சாலை அமைக்க, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

