/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபியில் பட்டாசு, காய்கறி வாங்க ஆர்வமில்லாத மக்கள்
/
கோபியில் பட்டாசு, காய்கறி வாங்க ஆர்வமில்லாத மக்கள்
கோபியில் பட்டாசு, காய்கறி வாங்க ஆர்வமில்லாத மக்கள்
கோபியில் பட்டாசு, காய்கறி வாங்க ஆர்வமில்லாத மக்கள்
ADDED : அக் 31, 2024 06:19 AM
.
கோபி: கோபி, கடை வீதியில் பட்டாசு மற்றும் காய்கறி கடைகளில், குறைந்தளவே மக்கள் கூட்டம் நேற்று காணப்பட்டது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (அக்.,31ல்) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோபி பஸ் ஸ்டாண்டு மற்றும் அனுமந்தராயன் கோவில் வீதியில் உள்ள துணிக்கடைகளில், நேற்று காலை முதல் குறைந்தளவே மக்கள் கூட்டம் காணப்பட்டது. அதேபோல், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்-பனை சங்கத்தில், கடந்த 25ம் தேதி முதல் பட்-டாசு விற்பனை துவங்கியது. மொத்தம், 13 லட்சம் ரூபாய்க்கு பட்டாசு ரகங்கள் வாங்கி இருப்பு வைத்திருந்ததில், நேற்று வரை மூன்று லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி உள்-ளது.கோபி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோ, 50 ரூபாய், கத்தரிக்காய், 60, சின்னவெங்காயம், 60, பெரியவெங்காயம், 70, வெண்டைக்காய், 50, பாகற்காய் மற்றும் பீர்க்கன்காய் தலா, 60 ரூபாய், பச்சமிளகாய், 40, இஞ்சி, 70 ரூபாய்க்கு விற்பனை-யானது. தீபாவளி பண்டிகைக்கு, அசைவ உணவுக்கு, மக்கள் ஆர்வம் காட்டுவதால், மார்க்கெட்டில் பச்சமிளகாய், இஞ்சி வியாபாரம் மட்டும் நன்றாக இருந்தது. ஆனால், காய்கறி வியாபாரம் மந்த-மாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல், கோபியில் உள்ள மளிகை கடை-களில், மல்லி, மசாலா, வரமிளகாய், பூண்டு வியாபாரம் நன்றாக இருந்ததாக வியாபாரிகள் கூறினர்.

