/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்தி மனு
/
ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்தி மனு
ADDED : ஆக 12, 2025 01:23 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு மாவட்டம் முழுவதிலும், 4,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. கடந்த, 2012ல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த, 12 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை, இன்சூரன்ஸ், வாகன உதிரி பாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் தங்களுக்கு கட்டுபடியாகும் கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, போக்குவரத்து துறை மூலம் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
முன்னதாக கருத்து கேட்டு செயல்படுத்தலாம். இணைய தளம் மூலம் கட்டணம் நிர்ணயித்து இயங்கும் ஆட்டோ, கால் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும். ரேபிடோ போன்ற பைக் டாக்ஸி இயக்கத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.