ADDED : நவ 13, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்,:அத்தாணி
அருகே கரட்டூர் மேடு மக்கள், அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று
துணை தாசில்தார் சின்னதம்பியிடம் மனு அளித்தனர். அதன் விபரம்:
அத்தாணி
அருகே கரட்டூர் கொத்தங்காடு, தம்மங்கரடு, நாடார் காலனி பகுதி
மக்களுக்கு, கரட்டூர்- கொண்டையம்பாளையம் வழியில் ஓடைகரையில் மயானம்
உள்ளது. அங்கு மேம்பாலம் கட்டியுள்ளதால் மயானம் சுருங்கி விட்டது.
இது தொடர்பாக பல துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை.
மயானத்துக்கு இடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

