/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரியாற்றின் உபரி நீரை நீரேற்று முறையில் நிரப்ப மனு
/
காவிரியாற்றின் உபரி நீரை நீரேற்று முறையில் நிரப்ப மனு
காவிரியாற்றின் உபரி நீரை நீரேற்று முறையில் நிரப்ப மனு
காவிரியாற்றின் உபரி நீரை நீரேற்று முறையில் நிரப்ப மனு
ADDED : டிச 05, 2024 07:37 AM
பவானி: காவிரியாற்றிலிருந்து வெளியேறும் உபரிநீரை, நீரேற்றம் செய்து பவானி, அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலர் பழனிசாமி, நேற்று முதல்வர் தனிப்பிரிவு, நீர்வளத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அதிகா-ரிகள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
பவானி, அந்தியூர் பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளன. இதை நம்பி
ஏராளமான விவசாயிகள் உள்ளனர். மேலும், சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர், குறிச்சி சுற்று வட்டார
பகுதியில், மானாவாரி நிலங்களும் அதிகம் உள்-ளன. பவானி, அந்தியூர் பகுதியில், 18 பெரிய ஏரிகள், 30க்கும்
மேற்பட்ட குளங்கள், குட்டைகள் உள்ளன. குளம், குட்டைகளை பொறுத்தவரை, மழை பெய்தால் மட்டுமே
தண்ணீர் தேங்கி நிற்கும்.மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் நுாற்றுக்கணக்கான டி.எம்.சி., மழை நீர், ஆண்டுதோறும் கடலில் வீணாக கலக்கிறது. மழை காலங்களில் வெளி-யேறும் நீரை, பம்பிங் சிஸ்டம் மூலம், பவானி,
அந்தியூர் பகுதி ஏரிகளுக்கு நிரப்பினால், விவசாயம் செழிப்படையும். குடிநீர் பிரச்னை தீரும். எனவே
அத்திக்கடவு-அவினாசி திட்டம் போல், பம்பிங் சிஸ்டம் மூலம், ஏரிகள், குளம், குட்டைகளுக்கு நீரை நிரப்பும்
திட்டத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்-டுள்ளது.