ADDED : ஜூன் 29, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி, கரட்டூரில் உள்ள அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையனை, மல்லிபாளையம் மற்றும் செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று சந்தித்தனர்.
இரு கிராமங்களிலும் உள்ள பகுதி நேர ரேசன் கடையை, முழு நேர கடையாக தரம் உயர்த்த வேண்டும். அதேபோல் மல்லிபாளையம் மாதேஸ்வரன் கோவில் மேட்டில், ௧௦ ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை தொட்டி அமைத்து தர கோரிக்கை வைத்தனர். எம்.எல்.ஏ., செங்கோட்டையன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்வதாக உறுதியளித்தார்.