/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செல்லுார் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு
/
செல்லுார் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு
செல்லுார் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு
செல்லுார் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.,யிடம் மனு
ADDED : மே 15, 2025 01:32 AM
ஈரோடு :தமிழ்நாடு முன்னாள் படை வீரர் சங்க தலைவர் பழனியப்பன் தலைமையில், ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் 'ஆப்ரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தியது. ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பேரணி நடந்தது. இதன்பின், மதுரையில் நடந்த நிருபர்கள் சந்திப்பில், அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ராணுவ வீரர்கள் எல்லையில் ஒன்றும் செய்யவில்லை. அந்த இடத்தில் ராணுவ வீரர்கள் தேவையில்லை. இன்றைக்கு நடக்கிற அனைத்து ஆப்ரேஷனும் டெக்னாலஜி தான்.
டெக்னாலஜியை தான் மத்திய அரசு வாங்கி கொடுத்துள்ளது. முக்கியமான அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் தான் இந்த போரை நடத்துகின்றனர் என தெரிவித்துள்ளார். போர் முனையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு என்ன சூழ்நிலை என்பது, போர் முடிந்து வந்த எங்களை போன்ற முன்னாள் வீரர்களுக்கே அது தெரியும்.முன்னாள் அமைச்சர் செல்லுார் கூறியது, அனைத்து ராணுவ வீரர்களுக்கும், முன்னாள் படை வீரர்களுக்கும் மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. ராணுவ வீரர்கள் குறித்து அவதுாறாக பேசிய, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.