/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் மரம் வெட்டி அகற்றம் நடவடிக்கை கோரி தாசில்தாரிடம் மனு
/
காங்கேயத்தில் மரம் வெட்டி அகற்றம் நடவடிக்கை கோரி தாசில்தாரிடம் மனு
காங்கேயத்தில் மரம் வெட்டி அகற்றம் நடவடிக்கை கோரி தாசில்தாரிடம் மனு
காங்கேயத்தில் மரம் வெட்டி அகற்றம் நடவடிக்கை கோரி தாசில்தாரிடம் மனு
ADDED : மார் 02, 2024 03:07 AM
காங்கேயம்: காங்கேயத்தில் திருப்பூர் சாலையில், சாலையோர மரங்களை வெட்டி சாய்த்தவர்கள் மீது, நடவடிக்கை கோரி காங்கேயம் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.
காங்கேயம் வேர்கள் அமைப்பின் நிர்வாகி சங்கரகோபால் தலைமையிலான தன்னார்வலர்கள், காங்கேயம் தாசில்தார் மயில்சாமியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
காங்கேயம்-திருப்பூர் சாலையில், புதிதாக திறக்கப்பட உள்ள ஒரு கடைக்கு அருகில், 20 ஆண்டுகளாக இருந்த வேப்பமரத்தை இரவோடு இரவாக இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். மரத்தை அகற்றி அந்த இடத்தில் சிமெண்ட் பூச்சு அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காங்கேயம் போலீசிலும் புகார் தரப்பட்டுள்ளது.