sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மலைப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டரிடம் மனு

/

மலைப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டரிடம் மனு

மலைப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டரிடம் மனு

மலைப்பகுதி கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டரிடம் மனு


ADDED : ஏப் 13, 2025 04:28 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் ரகு, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா-விடம், வழங்கிய மனுவில் கூறியதாவது:

மாவட்ட மலைப்பகுதிகளான தாளவாடி, கடம்பூர் மற்றும் அந்-தியூர் மலைப்பகுதிகளில் பல தலைமுறைகளாக பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.

மனித-விலங்கு மோதலை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். யானைகள் கிராமங்களில் நுழைவதை தடுக்க ஆழமான, அகல-மான அகழிகளை தோண்ட வேண்டும். அகழி தோண்டும் போது மண்ணை வனப்பகுதியில் கொட்டக்கூடாது. விளாங்கோம்பை வன செட்டில்மென்ட் பகுதிக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.வன உரிமை சட்டத்தை அமலாக்க வேண்டும். விளாங்கோம்-பைக்கு பள்ளி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மலைப்பகுதி விளைநிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆசனுார், கேர்-மாளம், திங்களூர், கடம்பூர் மலைப்பகுதிகளில் தடையின்றி மின்-சாரமும், திம்பம் மலைப்பகுதிக்கு மும்முனை

மின்சாரமும் வழங்க வேண்டும்.

கடம்பூர் மலைப்பகுதியில் இயக்கப்படும் பஸ்களில், பெண்க-ளுக்கு இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். திம்பம் மலைப்பகுதி பழங்குடி கிராமங்கள், ஆசனுார் பஞ்., கெத்-தேசால், கேர்மாளம் பஞ்., பகுதிகளுக்கு மொபைல்போன் டவர் அமைத்து, இணைப்பு கிடைக்க செய்ய வேண்டும்.

தாளவாடி யூனியன் இட்டரை, தடசலட்டி கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாத நிலையில், தற்போது வனத்துறை அனுமதியும் கிடைத்த விட்டதால் சாலை அமைக்க நிதி இல்லை என கூறு-கின்றனர். நிதி ஒதுக்கி விரைவாக சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us