/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரிகளை மீட்டுத்தர கலெக்டரிடம் மனு
/
லாரிகளை மீட்டுத்தர கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 05, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பவானி தாலுகா கேசரிமங்கலம், செவண்டியூரை சேர்ந்த மணிகண்டன் மனைவி கலா, 26; கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் கந்தசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என் கணவர் இரு லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இதற்காக வாங்கிய, 11 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி, கடன் கொடுத்த மோகன் எடுத்து சென்று, பதிவெண்ணை கர்நாடக மாநில எண்ணாக மாற்றி விற்க முயன்றார். இதுகுறித்து பவானி போலீசில் புகார் தெரிவித்தோம். போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். வாழ்வாதாரமாக உள்ள லாரிகளை எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

