/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புறம்போக்கு நிலத்தில் தர்கா அகற்ற வலியுறுத்தி மனு
/
புறம்போக்கு நிலத்தில் தர்கா அகற்ற வலியுறுத்தி மனு
ADDED : அக் 29, 2024 01:03 AM
புறம்போக்கு நிலத்தில் தர்கா
அகற்ற வலியுறுத்தி மனு
ஈரோடு, அக். 29-
இந்து அதிரடிப்படை மாநில பொது செயலாளர் ராஜகுரு தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோபி, சவண்டப்பூர் பஞ்., உறுப்பினராக உள்ளேன். எங்கள் பஞ்சாயத்தில் அரசு புறம்போக்கில் ஒரு தர்கா கட்டப்பட்டுள்ளது. அங்கு தற்போது கயிறு கட்டுவது, பாடம் போடுதல், மதம் சார்ந்த பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர். தவிர சவண்டப்பூர் கிராமத்தில் பல்வேறு தரப்பு மக்களின் சொத்துக்களை, வக்பு வாரியம் என்ற பெயரில் குறிப்பிட்டு ஆவணங்கள் வைத்துள்ளதால், அவற்றை விற்கவும், வாங்கவும் முடியாத நிலை நீடிக்கிறது.
அங்குள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது வக்பு வாரியத்துக்கு சொந்தமானது எனக்கூறும் நிலை உள்ளது. இவற்றை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, அந்த ஆவண உத்தரவுகளை ரத்து செய்து, குடியிருக்கும் பல்வேறு சமூக மக்களுக்குரியது என்பதை உறுதி செய்ய வேண்டும். தவிர அரசு புறம்போக்கில் அமைந்துள்ள தர்காவை அகற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

