ADDED : ஜூன் 09, 2026 02:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு, சூரம்பட்டியில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் மாவட்ட இணை செயலர் மதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வரி விதிக்கக்கூடாது. மருந்து விலை கட்டுப்பாடு ஆணையத்தை செயல்படுத்தி, மருந்து விலையை நிர்ணயிக்க வேண்டும். அத்யாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலை கட்டுப்பாட்டை, பொருட்-களின் மொத்த விலை நிர்ணய குறியீட்டில் இருந்து நீக்க வேண்டும். உடல் உபாதைகளுக்கு நாம் உட்கொள்ளும் அன்றாடம் பயன்பாட்டில் உள்ள மருந்துகள், வருடா வருடம், 10 சதவீதம் விலை ஏற்றி கொள்ளலாம் என்ற ஆணையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
