ADDED : ஆக 12, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: இந்து முன்னணி சார்பில், கோபி வாய்க்கால் ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், உழவாரப்பணி நேற்று நடந்தது.
ஈரோடு மேற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், கோபி நகர தலைவர் விமல்குமார், நகர செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் மக்களும் இணைந்து, கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீபாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஸ் அடங்கிய குழுவினர், சேவாக்கவுண்டனுார் ஆதிபராசக்தி கோவில், செம்பூத்தாம்பாளையம் மாரியம்மன் கோவில், நெசவாளர் காலனி விநாயகர் கோவில்களில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.