/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளியில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி
/
பள்ளியில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி
ADDED : ஜன 06, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட கல்லுாரி மாணவர்களுக்கான, இலக்கிய போட்டி, தமிழியக்கம் சார்பில், ஈரோடு ப.செ.பார்க் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதில், 150க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். திருவள்ளுவர் குறித்த பேச்சு, கவிதை மற்றும் கட்டுரை போட்டி நடந்தது.
ஒரு போட்டியில் ஒரு கல்லுாரியில் இருந்து இருவர் மட்டுமே பங்கேற்றனர். தமிழியக்க மாவட்ட செயலாளர் பவளசங்கரி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பொருளாளர் செந்தாமரை, இணை செயலாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.