/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ், பறக்கும்படை சோதனை
/
அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ், பறக்கும்படை சோதனை
அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ், பறக்கும்படை சோதனை
அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ், பறக்கும்படை சோதனை
ADDED : மார் 18, 2024 03:39 AM
ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில், 3 ஷிப்ட்களாக பணி செய்யும் வகையில், 25 பறக்கும் படை, 24 நிலை கண்காணிப்பு குழு, 8 வீடியோ கண்காணிப்பு குழு, 8 கணக்கு தணிக்கை குழு உட்பட, 144 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், 50,000 ரூபாய்க்கு மேல் பணம், அதிக எண்ணிக்கையில் பொருட்களை எடுத்து வந்தால் பறிமுதல் செய்கின்றனர்.
குறிப்பாக தமிழக - கர்நாடகா எல்லையான பர்கூர், பண்ணாரி, கேர்மாள், காரப்பள்ளம், ஆசனுார் செக்போஸ்ட், கோபி - சத்தி சாலை கோவை பிரிவு செக்போஸ்ட், கருங்கல்பாளையம் செக்போஸ்ட், நொய்யல் செக்போஸ்ட் என மாவட்ட அளவில், 10 செக்போஸ்ட்களிலும், 24 மணி நேர கண்காணிப்பு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும் ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாதனை சாவடி அருகே கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., ஜவகர் கூட்டாக வாகன தணிக்கை செய்தனர்.

