/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையில் திரும்ப முடியாமல் தவித்த பள்ளி வேன் 19 வயது டிரைவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி

ADDED : ஆக 12, 2025 05:23 AM
ஈரோடு: ஈரோடு திண்டலில் தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்படுகி-றது. நேற்று மாலை பள்ளி முடிந்து, பள்ளி வேனில் மாணவ, மாணவிகள் ஏற்றி செல்லப்பட்டனர். இவ்வாறு சென்ற ஒரு வேன், சிவன் நகரில் இருந்து பாலாஜி அவென்யூவில் திரும்ப முயன்றது. டிரைவரால் திருப்ப முடியாமல் சாலை நடுவே தடுமா-றியது. இதனால் வேன் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வேனை நிறுத்த செய்து முற்று-கை
யிட்டனர். இதனால் மாணவ, மாணவிகள் வீட்டுக்கு செல்ல முடியாமல் திகைத்தனர். தகவலறிந்து ஈரோடு தாலுகா போலீசார் விரைந்தனர்.
வேன் டிரைவரான, ஈரோடு கொங்கம்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேஷ், 19, என்பவரிடம் விசாரித்தனர். அவரிடம் லைசன்ஸ் இல்லை. வேனுக்கான ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் ஆவணங்களும் இல்லை. போக்கு-வரத்து விதிகளுக்கு உட்பட்ட கண்டிஷனில் வேன் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. அதேசமயம் மாற்று வேன் வரவழைக்-கப்பட்டு, அதில் மாணவ, மாணவியரை ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.டிரைவர் ராஜேஷை ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்-றனர். இதையடுத்து பள்ளி நிர்வாகியும் ஸ்டேஷனுக்கு அழைக்-கப்பட்டார். இருவரிடமும் இரவு, ௯:௩௦ மணியை கடந்து விசா-ரணை நீடித்தது.
முன்னதாக டிரைவர் ராஜேஷ், காலையில் அதிவேகமாக பள்-ளியில் வேனை ஓட்டியதில் போர்டு உடைந்ததும் விசாரணையில் தெரிய வந்தது