/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் 37 இடங்களில் மாசடைந்த தண்ணீர் பயன்படுத்த வேண்டாம் என கு.வ.வா., அறிவிப்பு
/
சென்னிமலையில் 37 இடங்களில் மாசடைந்த தண்ணீர் பயன்படுத்த வேண்டாம் என கு.வ.வா., அறிவிப்பு
சென்னிமலையில் 37 இடங்களில் மாசடைந்த தண்ணீர் பயன்படுத்த வேண்டாம் என கு.வ.வா., அறிவிப்பு
சென்னிமலையில் 37 இடங்களில் மாசடைந்த தண்ணீர் பயன்படுத்த வேண்டாம் என கு.வ.வா., அறிவிப்பு
ADDED : ஆக 13, 2025 05:14 AM
சென்னிமலை: பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்படும் தோல், சாய ஆலை-களில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றப்படுகி-றது. இதனால் சென்னிமலை யூனியனுக்குட்பட்ட ஈங்கூர், வாய்ப்-பாடி, வரப்பாளையம், முகாசிபிடாரியூர் என நான்கு ஊராட்சி-களில் நிலத்தடி நீர் அடியோடு மாசடைந்துள்ளது.
இந்த பகுதியில் போர்வெல், திறந்தவெளி கிணறுகளில் உள்ள தண்ணீரை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
இதில், 37 இடங்களில் குடிநீரில் பாக்டீரியா மற்றும் நச்சுப்-பொருள் கண்டறியப்பட்டது.
இதில், 15 இடங்களில் தண்ணீர் முற்றிலும் குடிக்க தகுதியற்றது என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த இடங்களில் குடிநீரை பயன்-படுத்தக்கூடாது. வேறு சுத்தமான நீரை மக்கள் பயன்படுத்து-மாறும் குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.
கண்டறியப்பட்ட இடங்கள்
முகாசிபிடாரியூர் ஊராட்சியில் அர்த்தனாரிபாளையம், திருமுகம்ம-லர்ந்தபுரம் உள்பட ஆறு இடங்கள்; வாய்ப்பாடி ஊராட்சியில் எளையம்பாளையம், சாணார்பாளையம், சுள்ளிமேடு, தோட்டத்-துபுதுார் உட்பட ஏழு இடங்கள்; வரப்பாளையம் ஊராட்சியில் கொங்கம்பாளையம், மூனம்பள்ளி, பாச்சங்காட்டூர் உட்பட ஒன்-பது இடங்கள்; ஈங்கூர் ஊராட்சியில் குட்டப்பாளையம், எழுதிங்-கள்பட்டி, காசிப்பில்லாம்பாளையம், செங்குளம் உள்ளிட்ட 15 இடங்கள் என, நான்கு ஊராட்சிகளிலும், 37 இடங்களில் போர்வெல், திறந்வெளி கிணறுகள் ஆகியவற்றின் நீர் குடிப்ப-தற்கு உகந்ததாக இல்லை என்று, குடிநீர் வடிகால் வாரிய அதிகா-ரிகள்,
சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எழுதியுள்ள கடி-தத்தில் தெரிவித்துள்ளனர்.