/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வக்கீல் கொலை வழக்கில் கஸ்டடி எடுத்த போலீசார்
/
வக்கீல் கொலை வழக்கில் கஸ்டடி எடுத்த போலீசார்
ADDED : ஆக 01, 2025 01:12 AM
தாராபுரம், தாராபுரத்தில் தனியார் பள்ளி வளாகம் அருகில், உயர் நீதிமன்ற வக்கீல் முருகானந்தம், படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் தனியார் பள்ளி தாளாளர் தண்டபாணி உள்பட ஆறு பேரை, தாராபுரம் போலீசார் கைது செய்தனர். இவர்களை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தேடி வருவதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை சிறையில் அடைக்கப்பட்ட ஆறு பேரையும், குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலையில், போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது காவலில் விசாரிக்க போலீசார், ஆறு நாள் அனுமதி கேட்டனர். இதையடுத்து, 4 நாட்கள் விசாரணைக்கு அனுமதித்தார்.

