/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுவன் ஓட்டிய காரால் விபத்து உரிய வழக்கு பதியாமல் போலீசார் அலைக்கழிப்பு

ADDED : நவ 18, 2025 01:30 AM
ஈரோடு, வெள்ளோடு தக்கங்கரை கொம்பனையை சேர்ந்தவர் ஆறுமுகம், 33; ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம், நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்கிறேன்.
கடந்த செப்.5ல் முத்தம்பாளையம் - ரங்கம்பாளையம் சாலையில் டூவீலரில் மாமனார் நடராஜுடன் சென்றேன். அப்போது பக்கவாட்டு சாலையில் அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தோம்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வகையில் எங்களுக்கு லட்ச கணக்கில் செலவு ஏற்பட்டது. அதேசமயம் காரை, 16 வயது சிறுவன் ஓட்டி வந்தார். விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்தாலும், சிறுவன் மீதும், அவரது பெற்றோர் மீதும் உரிய சட்ட விதிகளின்படி வழக்கை பதிவு செய்யவில்லை. போலீசார் எங்கள் கோரிக்கையை ஏற்க மறுப்பதுடன், ஸ்டேஷனில் உள்ள சில போலீசார் தரக்குறைவாக பேசி மிரட்டுகின்றனர். உரிய முறையில் விசாரணை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.