/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஞ்சாயத்து அலுவலகம் எதிரே பெண் தர்ணா
/
பஞ்சாயத்து அலுவலகம் எதிரே பெண் தர்ணா
ADDED : நவ 18, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி,கோபி அருகே ஒத்தக்குதிரை மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 50; மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிப்பதாக, பொம்மநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் முன் நேற்று மாலை திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். கோபி போலீசார் விசாரித்தனர்.
இதில், 'தனது வீட்டருகே இயங்கும், கோழி இறைச்சி கடையால், துர்நாற்றம், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. வீட்டுக்குள் பாம்பு நுழைகிறது. இறைச்சி கடையை அகற்ற வேண்டும்' என்றார். கோபி யூனியன் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே திரும்பி சென்றார்.

