/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அழைப்பாணையில் 'சொதப்பிய' போலீசார்; அலைக்கழிப்புக்கு ஆளான மக்கள்
/
அழைப்பாணையில் 'சொதப்பிய' போலீசார்; அலைக்கழிப்புக்கு ஆளான மக்கள்
அழைப்பாணையில் 'சொதப்பிய' போலீசார்; அலைக்கழிப்புக்கு ஆளான மக்கள்
அழைப்பாணையில் 'சொதப்பிய' போலீசார்; அலைக்கழிப்புக்கு ஆளான மக்கள்
ADDED : மே 29, 2024 07:17 AM
ஈரோடு : பெருந்துறை தாலுகா சிங்காநல்லுார், கருப்பம்பாளையத்தை சேர்ந்த குணசேகர் தலைமையில், 50 பேர் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
இவர்கள் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில், பூபாலகுமார் என்பவர் ஓடை புறம்போக்கு நிலம், மயானத்தை ஆக்ரமித்து, 50க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்த்து வருகிறார். இதனால் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பூபால குமாரின் மனைவி சுலோசனா, எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தார். இதனால் மனு மீது விசாரணை நடத்த, 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு, எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராக, திங்களூர் எஸ்.ஐ., கையெழுத்திட்ட கடிதம், குணசேகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு வழங்கப்பட்டது. இதன்படி, 50 பேர் எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்தனர். பணியில் இருந்த போலீசாரோ, 29ம் தேதிதான் விசாரணைக்கு அழைத்திருந்தோம் என்று தெரிவித்தனர். அழைப்பாணையில், 28ம் தேதி என்று குறிப்பிட்டுள்ளதே? என்று கேள்வி எழுப்பியதற்கு, தவறாக குறிப்பிட்டு விட்டோம் என்று தெரிவித்தனர். அழைப்பாணையில் கூட சரியான தேதி குறிப்பிடாத போலீசாரால், அலைக்கழிப்புக்கு ஆளானவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.