/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீரன் சின்னமலை 220வது நினைவு தினம் அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை
/
தீரன் சின்னமலை 220வது நினைவு தினம் அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை
தீரன் சின்னமலை 220வது நினைவு தினம் அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை
தீரன் சின்னமலை 220வது நினைவு தினம் அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை
ADDED : ஆக 04, 2025 08:44 AM
ஈரோடு: அறச்சலுாரை அடுத்த ஓடாநிலையில் தீரன் சின்னமலை, 220வது நினைவு ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினார். இதையொட்டி நடந்த அரசு விழாவில், 55 பயனாளிகளுக்கு, 5௪ லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார். அங்கு தமிழக அரசின் பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் இசைப்பள்ளி, பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். தீரன் சின்னமலை வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி., சுஜாதா, எம்.பி.,க்கள் பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ., ஈஸ்வரன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் சிந்து ரவிச்சந்திரன்,
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, ராமலிங்கம், கருப்பணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் ம.தி.மு.க., -தெற்கு மாவட்ட காங்., - த.மா.கா., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பா.ம.க., கவுரவ தலைவர் மணி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
பா.ஜ., சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார் மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.