/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்பு நிலத்தில் பொங்கல் விழா கோவில் நில மீட்பு இயக்கம் முறையீடு
/
ஆக்கிரமிப்பு நிலத்தில் பொங்கல் விழா கோவில் நில மீட்பு இயக்கம் முறையீடு
ஆக்கிரமிப்பு நிலத்தில் பொங்கல் விழா கோவில் நில மீட்பு இயக்கம் முறையீடு
ஆக்கிரமிப்பு நிலத்தில் பொங்கல் விழா கோவில் நில மீட்பு இயக்கம் முறையீடு
ADDED : மார் 13, 2024 07:43 AM
ஈரோடு : ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் சார்பில் தலைவர் சந்திரசேகர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷிடம், நேற்று மனு வழங்கினர்.
மனு விபரம்: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் - மீனாட்சிசுந்தரனார் சாலையை இணைக்கும், 80 அடி சாலை திட்டத்தை எதிர்த்து, அரசுக்கு எதிராக சி.எஸ்.ஐ., நிர்வாகம் நீதிமன்றம் சென்றது. தவிர, அவ்விடத்தில் உள்ள அரசு புறம் போக்கு நிலம், தங்களுக்கு சொந்தமானது என வழக்கு தொடுத்தது. இரு வழக்குகளிலும், 2022 டிச.,2ல் சி.எஸ்.ஐ.,க்கு எதிராக தீர்ப்பளித்து, வழக்கு
களையும் தள்ளுபடி செய்து அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழக அரசும், ஈரோடு மாவட்ட நிர்வாகமுமே இந்த தீர்ப்பை பெற்றுள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் சி.எஸ்.ஐ., நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை, அளந்து மீட்டெடுக்க வேண்டும். அந்நிலத்தில் அமைய உள்ள, 80 அடி திட்ட சாலையை அமைக்க வேண்டும். எனவே வரும் ஏப்., மாதம் நடக்க உள்ள பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் பக்தர்கள் பெங்கல் வைக்க அனுமதி அளிக்க வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை, அபராதத்துடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

