/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மைக்கேல்பாளையத்தில் சாலை அமைக்க பூஜை
/
மைக்கேல்பாளையத்தில் சாலை அமைக்க பூஜை
ADDED : ஜூலை 11, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பஞ்., காந்திநகர் பிரிவு முதல் கள்ளிமடை பஸ் நிறுத்தம் வரை, தார்ச்சாலை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் தார்ச்சாலை அமைக்க, 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை, எம்.எல்.ஏ., வெங்கடாசலம், பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்வில் அந்தியூர் தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.