/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்வி உதவித்தொகை பெற அஞ்சல் துறை அழைப்பு
/
கல்வி உதவித்தொகை பெற அஞ்சல் துறை அழைப்பு
ADDED : ஆக 09, 2025 01:27 AM
ஈரோடு, ஈரோடு, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்ட அறிக்கை;
அஞ்சல் துறை தபால் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க, 6 முதல், 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 'தீன் தயாள் ஸ்பார்ஷ்' திட்டம் செயல்படுகிறது. பள்ளி தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 5 சதவீத தளர்ச்சி உண்டு. தங்கள் பெயரில் அஞ்சல் தலை சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். பள்ளியில் இயங்கும் தபால் தலை சேகரிப்பு மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.
முதற்கட்டமாக தபால் தலை சேகரிப்பு பற்றி எழுத்துப்பூர்வ வினாடி - வினா தேர்வு வரும் செப்., 20ல் நடக்க உள்ளது. 2ம் கட்டமாக தபால் தலை சேகரிப்பு பற்றிய திட்ட அறிக்கை தயார் செய்தல் தேர்வு நடக்கிறது. முதற்கட்ட தேர்வில் நடப்பு நிகழ்வு, வரலாறு, அறிவியல், விளையாட்டு, கலாசாரம், புவியியல், ஆளுமை, அஞ்சல் தலை சேகரிப்பு தொடர்பான, 50 கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்.
இரண்டாம் கட்டமாக திட்ட அறிக்கை, 4 முதல், 5 பக்கத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தவிர, 16 அஞ்சல் தலை மற்றும் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 2 கட்ட தேர்விலும் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக, 6,000 ரூபாய் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, 'அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு -1' என்ற முகவரிக்கு வரும், 25க்குள் அனுப்ப வேண்டும். அஞ்சல் தலை சேகரிப்பு கணக்குகளை, தலைமை அஞ்சல் நிலையத்தில் மாணவர்கள் துவங்கலாம். அனைத்து அஞ்சலகத்திலும் விண்ணப்பம் கிடைக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.