/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாய, பிரின்டிங் ஆலைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
/
சாய, பிரின்டிங் ஆலைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
சாய, பிரின்டிங் ஆலைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
சாய, பிரின்டிங் ஆலைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
ADDED : டிச 18, 2024 01:27 AM
ஈரோடு, டிச. 18-
ஈரோடு, வைராபாளையம் பகுதியில் செல்லும் பேபி வாய்க்காலில், இரவு நேரத்தில் சட்ட விரோதமாக, சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
கடந்த இரண்டு நாட்களாக, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வைராபாளையம் பகுதியில் உள்ள சாய, சலவை, பிரின்டிங் தொழிற்சாலைகளில் சோதனை நடத்தினர். அப்போது பிரின்டிங் மற்றும் டையிங் என, இரண்டு தொழிற்சாலைகளில் இருந்து, சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டது.
தவிர, அங்கு செயல்படும் ரசாயன தொழிற்சாலையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் எவ்வித பாதுகாப்பு இன்றி, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரசாயன திரவம் இருந்ததும், அந்த தொழிற்சாலை அனுமதி இன்றி செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி, பிரின்டிங், டையிங், ரசாயன உற்பத்தி செய்யும் ஆலை என, மூன்று இடத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.