/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரசவத்துக்கு பயந்து ஒளிந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்
/
பிரசவத்துக்கு பயந்து ஒளிந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்
பிரசவத்துக்கு பயந்து ஒளிந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்
பிரசவத்துக்கு பயந்து ஒளிந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்
ADDED : மார் 11, 2025 06:48 AM
அந்தியூர்: பர்கூர் மலை கிராமம் சோளகனையை சேர்ந்த தொழிலாளி பொம்மிரான் மனைவி ஜோதி, 20; கர்ப்பமடைந்த இவர், பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டார்.
கடந்த, 3ம் தேதி பிரசவ தேதியாக அறிவித்தனர். இதற்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேருமாறு கூறியிருந்தனர். மருத்துவமனைக்கு செல்ல பயந்த ஜோதி, ஐந்து நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து தலைமறைவானார்.
தகவலறிந்த அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான சுகாதார குழுவினர் பல இடங்களில் விசாரித்தும் பயனில்லை.இந்நிலையில் தாமரைக்கரை அருகே தேவர்மலையில் உள்ள தாய் வீட்டில் இருப்பதை அறிந்து, சக்தி கிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறையினர், பர்கூர் போலீஸ், வனத்துறையினர் உதவியுடன் நேற்று முன்தினம் சென்றனர். அறிவுரை கூறியும் ஏற்காமல் பிடிவாதமாக ஜோதி வரமறுத்தார்.
அரை மணி நேர தொடர் போராட்டத்துக்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்தனர். நள்ளிரவில் சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாய், சேய் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.