/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.2.44 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்
/
ரூ.2.44 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்
ADDED : டிச 14, 2024 01:42 AM
ரூ.2.44 கோடி மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்
காங்கேயம், டிச. 14-
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பரஞ்சேர்வழி, ஆலம்பாடி, சிவன்மலை, படியூர் ஊராட்சிகள் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், 15-வது நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சி பொதுநிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கனிமம் மற்றும் சுரங்கம் நிதி திட்டங்களில், 1.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து, 1.31 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல குழுத்தலைவர் இல.பத்மநாபன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன். காங்கேயம் ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணை பிரகாஷ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.