/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டா வழங்கியதால் ரத்தான ஆர்ப்பாட்டம்
/
பட்டா வழங்கியதால் ரத்தான ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 12, 2025 02:02 AM
பவானி, பவானி அடுத்த ஒலகடம் ஆதிதிராவிடர் காலனியில், 52 குடும்பத்தினர், 60 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். இவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. பல ஆண்டுகளாக போராடியும் பலனில்லை. இந்நிலையில் வீட்டு மனை பட்டா கேட்டு, வி.சி., கட்சி சார்பில், பவானி தாலுகா அலுவலகத்துக்கு நேற்று ஆர்ப்பாட்டம் செய்ய சென்றனர்.
வி.சி., வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், மாநில துணை பொது செயலாளர் சுசி கலையரசன் உள்ளிட்ட கட்சியினர், மக்களுடன் தாலுகா அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் தடுத்து முக்கிய நிர்வாகிகளை மட்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். அவர்கள் தாசில்தாரிடம் பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டனர்.
இதில் முதற்கட்டமாக, 52 குடும்பத்தினரில், 10 குடும்பத்தினருக்கு பட்டா ஆணையை வழங்கினர். வரும் நாட்களில் மற்றவர்களுக்கும் பட்டா வழங்கப்படும் எனக்கூறவே, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.