/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெறிநாய் கடித்து 9 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு போராட்டம்
/
வெறிநாய் கடித்து 9 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு போராட்டம்
வெறிநாய் கடித்து 9 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு போராட்டம்
வெறிநாய் கடித்து 9 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு போராட்டம்
ADDED : அக் 04, 2025 01:16 AM
காங்கேயம், காங்கேயத்தை அடுத்த பரஞ்சேர்வழி, உறையன்காட்டுவலசை சேர்ந்த விவசாயி பிரகாஷ், 42; பட்டி அமைத்து, 60 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பட்டிக்கு சென்றபோது, 3 குட்டிகள் உட்பட ஒன்பது ஆடுகள் இறந்து கிடந்தன. காங்கேயம் போலீசார், கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார்.
இதில் தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலியானது தெரியவந்தது. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதுவரை இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு பலருக்கு சென்றடையவில்லை என்று, இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கேயம் தாசில்தார் மோகனன், காங்கேயம் ஏ.எஸ்.பி., அர்பிதா ராஜ்புட், போலீசார், கால்நடை துறை உதவி இயக்குநர் பகலவன் மற்றும் மருத்துவர் தினேஷ், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.