/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கர்பாளையத்தில் குடிநீர் கேட்டு மறியல்
/
கொங்கர்பாளையத்தில் குடிநீர் கேட்டு மறியல்
ADDED : மே 05, 2024 02:04 AM
டி.என்.பாளையம்:டி.என்.பாளையத்தை
அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சியில், ஒரு வாரமாக குடிநீர் வினியோகம்
செய்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. ஊராட்சி தலைவரிடம் பலமுறை
தகவல் தெரிவித்தும் பலனில்லை. இந்நிலையில் நேற்று காலை, அப்பகுதியை
சேர்ந்த பெண்கள், ஆண்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் காலி
குடங்களுடன், கொங்கர்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
பங்களாப்புதுார் போலீசார், மக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகம் தடைபட்டது குறித்து
ஊராட்சி தலைவர் ஜானகியிடம் விபரம் கேட்டறிந்தனர். மேல்நிலை
தொட்டிகளுக்கு தண்ணீர் வரும் குழாய் வால்வை யாரோ அடைத்து விட்டனர்.
இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டதாக கூறினார். இதை மக்களிடம்
போலீசார் தெரிவிக்கவே, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால்
கொங்கர்பாளையம்-வினோபா நகர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து
பாதித்தது.