/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு சென்னிமலை அருகே பரபரப்பு
/
பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு சென்னிமலை அருகே பரபரப்பு
பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு சென்னிமலை அருகே பரபரப்பு
பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு சென்னிமலை அருகே பரபரப்பு
ADDED : அக் 29, 2024 01:03 AM
பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு
சென்னிமலை அருகே பரபரப்பு
சென்னிமலை, அக். 29-
சென்னிமலை அருகேயுள்ள எக்கட்டாம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 70; கூலி தொழிலாளி. உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை இறந்து விட்டார்.
உடலை அடக்கம் செய்வதற்காக அதே பகுதி நொய்யல் ஆற்றங்கரையோரம், உறவினர்கள் தரப்பில் குழி தோண்டப்பட்டது. இதற்கு அப்பகுதி விவசாயி ஒருவர், தனது பட்டா நிலம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். சுப்பிரமணி உறவினர்கள் ஏற்க மறுத்து இங்குதான் அடக்கம் செய்வோம் என்றதால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னிமலை போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
'அரசு சர்வேயர் மூலம் அளவீடு செய்து, இங்கு பட்டா நிலம் எது? சுடுகாட்டு நிலம் எது? என்பதை கண்டறியலாம். தற்போது குழி தோண்டிய நிலையில், சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்' என்று போலீசார் கூறியதை இருதரப்பும் ஏற்று கொண்டனர். இதையடுத்து குழி தோண்டிய இடத்தில் சடலத்தை புதைத்து சென்றனர். இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

