/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
/
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : ஜூலை 11, 2025 01:04 AM
ஈரோடு,  ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம், மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நாளை நடக்கிறது.
இதில் புதிய ரேஷன் கார்டு கோருதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் எண் சேர்த்தல் போன்ற கோரிக்கை குறித்து மனு வழங்கி தீர்வு பெறலாம்.
ஈரோடு தாலுகா - வீரப்பன்சத்திரம் அசோகபுரம் ரேஷன் கடை, பெருந்துறை - சிறுகளஞ்சி, மொடக்குறிச்சி - லக்காபுரம், கொடுமுடி - ஆவுடையார்பாறை, கோபி - தடப்பள்ளி அன்னை சத்யா நகர், நம்பியூர் - வேமாண்டம்பாளையம், பவானி - மைலம்பாடி, அந்தியூர் - சென்னம்பட்டி முரளி சென்னம்பட்டி, சத்தியமங்கலம் - புளியம்கோம்பை, தாளவாடி - ஹங்கல்வாடி ரேஷன் கடைகளில் முகாம் நடக்கவுள்ளது.

