/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
/
சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
ADDED : செப் 07, 2024 08:02 AM
ஈரோடு: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகல-மாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலை-களை வீடுகளில் வைத்து விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், லட்டு உள்ளிட்ட பதார்த்தங்களை படைத்து மக்கள் வழிபடுவர். இதற்கான பூஜை பொருட்களை வாங்க, ஈரோடு மாநகர கடைவீதிகளுக்கு, மக்கள் நேற்று படையெடுத்தனர்.
அதேசமயம் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்ட ஆர்.கே.வி.சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, நேதாஜி சாலை, கொல்லம்பாளையம், மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் திரண்டனர். மக்கள் தங்களுக்கு பிடித்த சிலைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
விநாயகருக்கு உகந்த வெள்ளை மற்றும் கலர் எருக்கம் பூ மாலை, காய்கனி, வண்ணக்குடை உள்ளிட்ட அலங்கார பொருட்-களையும் மக்கள் வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் கடைவீதி-களில் கூட்டம் அலைமோதியது.
காய்கறி, பழங்கள், பூக்களின் விலை உயர்வு
விநாயகர் சதுர்த்தி விழாவால், ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் மற்றும் சின்ன மார்க்கெட்டில், காய்கறி மற்றும் பழங்கள் விலை நேற்று எகிறியது.
மாதுளை கிலோ-250 ரூபாய், ஆரஞ்ச் -௧60, விளாம்பழம்-70, கொய்யா-80, ஆப்பிள்-240 ரூபாய் முதல் 280 ரூபாய், திராட்சை-120 ரூபாய், பேரிக்காய்-120 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார்-400 ரூபாய் முதல் 500 ரூபாய்; செவ்வாழை-500 ரூபாய் முதல் 600 ரூபாய்; தேன்வாழை-350 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விலை போனது.
வெள்ளை பூசணி கிலோ, 30 ரூபாய், சர்க்கரை பூசணி, 30, உருளை, 60, தக்காளி, 20 ரூபாய் முதல் 30 ரூபாய், வெண்டை, 30, கத்திரிக்காய், 40, பீன்ஸ், 40, சின்ன வெங்காயம், 40 ரூபாய் முதல் 50, பெரிய வெங்காயம், 70, முள்ளங்கி, 40, முட்-டைகோஸ், 30, புடலைங்காய், 30, பாகற்காய், 40, பீர்க்கங்காய், 40, முருங்கை, 40 ரூபாய்க்கும் விற்றது. அதேசமயம் மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள பூ மார்க்கெட்டில், விற்பனை அமோகமாக இருந்தது. கோவில்களில் சிறப்பு பூஜை, மலர் அலங்காரம் செய்ய, பல்வேறு கோவில் நிர்வாகிகள் மூட்டை மூட்டையாக வாங்கி சென்றனர். சில்லறை வியாபாரிகளும், வழக்கத்தை விட அதிகளவில் வாங்கி சென்றனர்.
மல்லிகை பூ கிலோ, 1,000 ரூபாய், முல்லை, 800 ரூபாய், ஜாதிப்பூ, 600, சம்பங்கி, 300, செவ்வந்தி, 280 முதல் 300, கோழிக்கொண்டை கிலோ, 100, அரளி, ௨00, ரோஜா பூ, 400, மருகு கட்டு, 20, துளசி கிலோ, 60, மரிக்கொழுந்து ஒரு கட்டு, 70, வாடாமல்லி கிலோ, 120 ரூபாய் முதல் 160 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
விநாயகர் பூஜைக்கு உகந்த அருகம்புல் ஒரு கட்டு, 30 ரூபாய், எருக்கம்பூ மாலை ஒன்று, 30 ரூபாய், தாமரைப்பூ ஒன்று, 40, ஒரு மாவிலை கட்டு, 20- ரூபாக்கும் விற்பனை செய்யப்பட்டது.