/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதுப்பை ஞானசம்பந்தர் பள்ளி: காங்கேயம் தாலுகாவில் முதலிடம்
/
புதுப்பை ஞானசம்பந்தர் பள்ளி: காங்கேயம் தாலுகாவில் முதலிடம்
புதுப்பை ஞானசம்பந்தர் பள்ளி: காங்கேயம் தாலுகாவில் முதலிடம்
புதுப்பை ஞானசம்பந்தர் பள்ளி: காங்கேயம் தாலுகாவில் முதலிடம்
ADDED : மே 09, 2024 06:22 AM
வெள்ளகோவில் : திருப்பூர் மாவட்டம், -வெள்ளகோவில் அடுத்துள்ள, புதுப்பை ஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.சங்கவி, நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு 591 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உயிரியல் பாட பிரிவில் திருப்பூர் மாவட்ட அளவிலும், காங்கேயம் தாலுகா அளவிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். வணிகவியல் பிரிவில் இதே பள்ளியை சேர்ந்த எம்.பி.சந்துரு 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்தார். மாணவி எஸ்.தர்ஷினி, 582 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றனர். 19 பேர், 500க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், 18 மாணவ, மாணவிகள் 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பாடவாரியாக தமிழில், 99 மதிப்பெண்கள், ஆங்கிலத்தில், 99, கணிதத்தில், 98, இயற்பியலில், 98, உயிரியலில், 98, வேதியியலில், 99, கணினி அறிவியலில், 100, கணக்கு பதிவியலில், 99, வணிகவியலில், 100, பொருளியலில், 100, என அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்தனர்.பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் எம்.பரிமளம், முதல்வர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.