/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பு.புளியம்பட்டி நகராட்சி வணிக வளாக கடைகள் ஏலம்
/
பு.புளியம்பட்டி நகராட்சி வணிக வளாக கடைகள் ஏலம்
ADDED : மே 15, 2025 01:33 AM
புன்செய்புளியம்பட்டி :புன்செய் புளியம்பட்டி நகராட்சி, ஜவகர் மெயின் ரோடு மற்றும் வாரச்சந்தை பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளுக்கான ஏலம், நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கருணாம்பாள் முன்னிலையில் நடைபெற்றது.
நேற்று காலை மொத்தம், 23 கடைகளுக்கான பொது ஏலம் துவங்கியது. இதில் அதிகபட்சமாக ஜவகர் மெயின் ரோடு கடை எண்- 7, ரூ.57 ஆயிரத்துக்கும், குறைந்தபட்சமாக வாரச்சந்தை பகுதி கடை எண்- 5, ரூ.21 ஆயிரத்து 400 க்கும் ஏலம் போனது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் கூறுகையில், '' 23 கடைகளுக்கான ஏலம் அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்று கடைகளுக்கு யாருமே ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை. மீதமுள்ள, 20 கடைகளுக்கான ஏலம் நடந்த நிலையில், 11 கடைகள் ஏலம் போனது. மீதமுள்ள கடைகளுக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த கடைகளுக்கான ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே ஏலம் நடைபெறாத கடைகளுக்கான மறு ஏலம் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது,'' என்றார்.