ADDED : செப் 21, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் :புரட்டாசி மாதத்தின் முதலாவது சனிக்கிழமையான நேற்று, தாராபுரம் கோட்டை
மேடு உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் அமராவதி ஆற்றங்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி மற்றும் பிரசித்தி பெற்ற காடு ஸ்ரீ அனுமந்தராய சுவாமி கோவிலில் நடந்த பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.