/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூட்டுறவு சங்கத்துக்கு குவாரி போயர் கூட்டமைப்பு மனு
/
கூட்டுறவு சங்கத்துக்கு குவாரி போயர் கூட்டமைப்பு மனு
கூட்டுறவு சங்கத்துக்கு குவாரி போயர் கூட்டமைப்பு மனு
கூட்டுறவு சங்கத்துக்கு குவாரி போயர் கூட்டமைப்பு மனு
ADDED : அக் 28, 2025 01:30 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு போயர் கூட்டமைப்பு மாநில தலைவர் நாகராஜ், கோபி வட்டம் கொத்தடிமைகள் மறுவாழ்வு ஜல்லி கல் உடைப்போர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சார்பில் மனு வழங்கி கூறியதாவது:
கோபி அருகே மலையப்பாளையத்தில் உள்ள கூட்டுறவு சங்கம் ஜல்லி, கல் உடைப்போர் சார்பில் செயல்பட்டது. இச்சங்க உறுப்பினர்கள், முற்றிலுமாக ஜல்லி, கல் உடைப்பு பணிகளை செய்து வந்தனர். எங்கள் சங்கத்துக்கு வழங்கப்பட்ட குவாரிக்கு, 2021 மே, 29 ல் குத்தகை உரிமம் முடிவடைந்தது. கடந்த, 5 ஆண்டாக குவாரி இல்லாமல், கூலி வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறோம்.
அக்குவாரியை வேறு நபர்களுக்கு குத்தகைக்கு வழங்கக்கூடாது. எங்கள் சங்கத்துக்கே வழங்க வேண்டும். வேறு பகுதியில் உள்ள குவாரியிலும் தொழில் செய்ய உறுப்பினர்களுக்கு அனுமதி தர வேண்டும். சங்கத்தில் உள்ள நிதி மூலம், குழுக்கடன், நகைக்கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

