/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது
/
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது
ADDED : டிச 30, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கால்நடை துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்-டத்தின், எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் ஈரோடு மாவட்டத்தில் நேற்று துவங்கியது.
மொடக்கு-றிச்சி, கள்ளகவுண்டன்பாளையத்தில் கலெக்டர் கந்தசாமி முகாமை துவக்கி வைத்தார். ஜன., 28 வரை ஈரோடு மாவட்-டத்தின் அனைத்து பகுதிகளிலும், 2 லட்சத்து, 88,650 கால்நடை-களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக மூன்று லட்சத்து, 26,100 டோஸ் தடுப்பூசி மருந்து பாதுகாப்பாக வைக்-கப்பட்டுள்ளதாக, கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

