/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
/
பவானி பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : நவ 01, 2024 01:22 AM
பவானி பகுதியில் மழை
விவசாயிகள் மகிழ்ச்சி
பவானி, நவ. 1-
பவானி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு பின், கனமழை பெய்தது. பவானி, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், ஊராட்சிக்கோட்டை, தொட்டிபாளையம், சேர்வராயன்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இரவு 11:30 மணிக்கு மேல், 40 மில்லி மீட்டர் மழை பெய்தது.
இதே போல், அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பூதப்பாடி, குருவரெட்டியூர், சென்னம்பட்டி, ஜரத்தல் உள்ளிட்ட இடங்களிலும், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததில், 41 மில்லி மீட்டர் அளவு பதிவாகியுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. இதுதவிர, வெள்ளித்திருப்பூர், மாத்துார், ரெட்டிபாளையம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம் ஆகிய இடங்களில், 20 மிடத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது.