நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை :சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 10 நாட்களுக்கு மேலாக கடும் வெயில் சுட்டெரித்தது. நேற்றும் மதியம், 2:௦௦ மணி வரை வழக்கம்போல் வெப்பத்தின் தாக்கம் இருந்தது. 2 மணிக்குப் பிறகு, மழை பெய்ய தொடங்கியது.
அரை மணி நேரம் அதேவேகத்தில் கொட்டி தீர்த்தது. இதேபோல் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், கண்டியானுார் மேட்டூர், மைக்கேல்பாளையம், புதுப்பாளையம், புதுமேட்டூர், அண்ணாமடுவு உள்ளிட்ட இடங்களில் நேற்று மதியம், 2:20 மணி முதல் 2:40 வரை துாறல் மழை பெய்தது.