ADDED : ஜூலை 20, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, 5:30 மணிக்கு மழை பெய்ய
தொடங்கியது. அரை மணி நேரம் அதே வேகத்தில், 6:00 மணி வரை பெய்தது.
மழையால்
ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மழை நின்ற பின் மின் வினியோகம்
சீரானது. மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
