ADDED : ஆக 15, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகரில் நேற்று மாலை, 4:00 மணியளவில் வானம் திடீரென மேகமூட்டமாக
மாறியது. அதை தொடர்ந்து, 4:30 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது.
அதே
வேகத்தில் அரை மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன்பின் வேகம் குறைந்து
சாரலாக மாறி, 15 நிமிடத்தில் நின்றது. மீண்டும் இரவு, 7:00 மணிக்கு
தொடங்கி, 20 நிமிடம் பெய்தது. மழையால் சாலையில் பள்ளமான இடங்களில்,
குளம்போல் மழை நீர் தேங்கியது.* பெருந்துறையில் நேற்று மாலை, 4:00
மணிக்கு தொடங்கிய கனமழை, அரை மணி நேரம் அதே வேகத்தில்
கொட்டித்தீர்த்தது. இதனால் இரவில் சூடு தணிந்து, குளிர் காற்று
வீசியது.
