ADDED : நவ 22, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது
வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் பாம்பு
நடமாட்டத்தை பார்த்தார்.
இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல்
தெரிவித்தார். அங்கு சென்ற வீரர்கள், 10 நிமிடத்தில் பாம்பை பிடித்து
வனத்துறையில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
வீட்டில்
பிடிபட்ட, 2 அடி நீள வெள்ளைகோல் வரையன் பாம்பு, அரிய வகையை சேர்ந்த
ஒன்றாகும். இந்திய ஓநாய் பாம்பு என்றும் இது அழைக்கப்படுகிறது. இது
விஷமற்றது. ஆனால் கடித்தால் வலி ஏற்படும். இரவில் சுறுசுறுப்பாக
செயல்படும். சுவர்களில் ஏறும் திறன் கொண்டது. பல்லி, அரணை, தவளைகளை
உண்ணும். பார்ப்பதற்கு கட்டு விரியன் போல் இருக்கும்.
இவ்வாறு கூறினர்.
